Friday, May 23, 2008

459. இளஞ்சோலை பூத்ததா




அஆஆஆஆஆஆஆஆ
அஆஆஆஆஆஆஆஆ

இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்

ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

எந்தச் சொந்தங்கள் யாரோடு என்று
காலந்தான் சொல்லுமா?
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்
தேதிதான் சொல்லுமா?

சோலை எங்கும் சுகந்தம்
மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன்தான் மயங்கும்
கண்கள் சொன்னால் விளங்கும்

ஒரு மெளனம் தீர்ந்தது
சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல
சந்தம் பொங்கும் மெல்ல
மாயமல்ல மந்திரமல்ல

இளஞ்சோலை பூத்ததா
இளஞ்சோலை பூத்ததா

ஊமையாய்ப் போன சங்கீதம் ஒன்று
இன்றுதான் பேசுதோ
மேடையில்லாமல் ஆடாத கால்கள்
இன்றுதான் ஆடுதோ

கண்ணில் என்ன கனவோ
நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது
விதிதானே சேர்ப்பது
இந்தப் பாசம் பாவம் இல்லை
நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை

இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக் கோலம்..

படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam