Sunday, May 11, 2008

421. ஒரு நாள் போதுமா?





ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா?

புதுநாதமா சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா?

ராகமா சுகராகமா கானமா தேவகானமா
என் கலைக்கு இந்த திருநாடு சமமாகுமா?

நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்டப் பின்னாலே அவர் மாறுவார்

அழியாத கலையென்று எனைப் பாடுவார்
எனையறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ

எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ..
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ
கலையாத மோகனச் சுவை நானன்றோ

கானடா என் பாட்டுத் தேனடா
இசை தெய்வம் நானடா


படம்: திருவிளையாடல்
இசை: கே.வி. மகாதேவன்
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: பாலமுரளி கிருஷ்ணா

**

விரும்பிக் கேட்டவர்: சுவேக்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam