Tuesday, May 27, 2008

471. மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி



சிலுசிலுவென குளிரடிக்குது அடிக்குது
சிறு அரும்புகள் மலர் வெடிக்குது வெடிக்குது
வனம் விட்டு வனம் வந்து
மரங்கொத்திப் பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே

மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவி
அலை ஆடை கலையாமல் தலையாட்டும் அருவி
மலை முடியினில் பனி வழியுது வழியுது மண் மணக்குதம்மா
கலையழகினில் மனம் கரையுது கரையுது கண் மயங்குதம்மா

(மலையாளக் கரையோரம்)


நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள
நீரோடை தாயைப் போல வாரி வாரி அள்ள
நீல வானம் அதில் எத்தனை மேகம்
நீர் கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும்
காட்டோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச
காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச

தேக்கும் பாக்கும் கூடாதோ
தோளைத் தொட்டு ஆடாதோ
பார்க்கப் பார்க்க ஆனந்தம்
போகப் போக வாராதோ
என் மனம் துள்ளுது
தன் வழி செல்லுது
வண்ண வண்ணக் கோலம்


(மலையாளக் கரையோரம்)


தூரல் உண்டு மலைச்சாரலும் உண்டு
பொன்மாலை வெயில் கூட ஈரமாவது உண்டு
தோட்டம் உண்டு கிளிக்கூட்டமும் உண்டு
கிள்ளைக்கும் நம்மைப் போல காதல் வாழ்க்கை உண்டு
நான் அந்த கிள்ளைப் போல வாழ வேண்டும்
வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்

எண்ணம் என்னும் சிட்டுத்தான்
ரெக்கைக் கட்டிக் கொள்ளாதா
எட்டுத்திக்கும் தொட்டுத்தான்
எட்டிப் பாய்ந்து செல்லாதா
என் மனம் துள்ளுது
தன் வழி செல்ல்து
வண்ண வண்ணக் கோலம்

(மலையாளக் கரையோரம்)


படம்: ராஜாதி ராஜா
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

***

விரும்பிக் கேட்டவர்: கிரி

1 Comment:

ஆயில்யன் said...

சூப்பரோட சூப்பர் பாட்டு கப்பி

தாங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))
//தூரல் உண்டு மலைச்சாரலும் உண்டு
பொன்மாலை வெயில் கூட ஈரமாவது உண்டு
தோட்டம் உண்டு கிளிக்கூட்டமும் உண்டு
கிள்ளைக்கும் நம்மைப் போல காதல் வாழ்க்கை உண்டு
நான் அந்த கிள்ளைப் போல வாழ வேண்டும்
வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்//


நல்லா இருக்கும்:)

Last 25 songs posted in Thenkinnam