வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்
(வெள்ளைப் பூக்கள்)
காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ!
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ!
(வெள்ளைப் பூக்கள்)
எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!
(வெள்ளைப் பூக்கள்)
படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடல்: வைரமுத்து
இசையமைத்து பாடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான்
Monday, May 5, 2008
411. வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
பதிந்தவர் கப்பி | Kappi @ 2:17 AM
வகை 2000's, AR ரஹ்மான், மணிரத்னம், வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
அழகான பாடல்...;)
அருமை. ஆனால்....காட்சிதான் மனசைப் பிழிஞ்சுருது.
Post a Comment