Sunday, May 11, 2008

423. உயிரும் நீயே உடலும் நீயே

உலகத்திலுள்ள எல்லா தாய்மார்களுக்கும் தேன்கிண்ணத்தின் அன்னையர் தின வாழ்த்துக்கள்..
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)

விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)

படம்: பவித்ரா
இசை: AR ராஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

வரிகள்: வைரமுத்து

5 Comments:

ALIF AHAMED said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்..
உன்னிக்கிருஷ்ணன் இழைஞ்சு இழைஞ்சு பாடி இருக்கிறார்.. நல்ல பாட்டு மை ப்ரண்ட்..

வல்லிசிம்ஹன் said...

அன்னையர் தின நல் வாழ்த்துகள். ரொம்ப நல்லா இருக்க்கு மைஃப்ரண்ட்.

கானா பிரபா said...

அன்னையர்க்கு தின வாழ்த்துக்கள்

பாட்டு கலக்கல்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப பிடித்த பாடல். நன்றி :)

Last 25 songs posted in Thenkinnam