வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
படம்: ஒரு தலை ராகம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Saturday, May 24, 2008
463. வாசமில்லா மலரிது
பதிந்தவர் MyFriend @ 11:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
சூப்பர்! நான் இந்த படப்பிடிப்பை நேரில் பார்த்தவனாக்கும் 9ம் வகுப்பு லீவில்!!!
சூப்பர் பாட்டு
எங்க ஊருக்கார பயபுள்ள மியூசிக் போட்டு கலக்குனது அந்த காலத்துல :))
//மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட//
:)))))
Post a Comment