சிவக்க சிவக்க பட்டு சேலை
சிரிக்க சிரிக்க நிக்குதே
ஜொலிக்க ஜொலிக்க மணமாலை
மனசு சேர்த்து வைக்குதே
குங்கும பூவே மஞ்சள் நிலாவே
காதலின் கனவே திருமண உறவே
மொட்டு விட்ட மனசுக்குள்
ஏ ஒரு ஆசை வெடி வெடிச்சாச்சு
பஞ்சவர்ண குயிலுக்கு
ஒரு வானவில் கிடைச்சாச்சு
இதம் ஒரு கையில்
சுகம் ஒரு கையில்
நடுவிலே தங்கை உள்ளத்தில் பேரானந்தம்
பிரிவு ஒரு கண்ணில்
உறவு ஒரு கண்ணில்
இரண்டிலும் அண்ணன் நெஞ்சம்தான்
மெல்ல தருவாரோ
(ஏ ஒரு ஆசை..)
(சிவக்க..)
தெய்வங்கள் வாழ்த்துமே உன்னை இன்றைக்கு
சொந்தங்கள் சூழவே சென்றாய் இன்னைக்கு
அண்னந்தான் ஆசையாய் செய்த பொன்சிலையே
மாங்கல்யம் சூடினால் நீயும் தேவதையே
நாளை நீ வேறுரு இல்லத்தில்
சேவைகள் செய்யும் நேரத்தில்
எத்தனை இன்பச் சுமைகள் தோன்றும் நெஞ்சத்தில்
கார்த்திகை தீபம் மணமாக
மார்கழி கோலம் முகமாக
நீயொரு இல்லத்தரசி ஆகும் நாளாக.. ஓஹோ..
(குங்கும பூவே...)
பாசத்தின் மழையிலே நனைந்தாய் இத்தனை நாள்
முத்தத்தில் அலையிலே நனையும் திருமண நாள்
ஆசைகள் ஆடையை தாண்டி வரும் நேரம்
ஆண் மகனின் ஆவணங்கள் உன்னை தொடும் நேரம்
நாளை உன் வயிற்றில் பூப்பூக்கும்
அதுவுமோர் ஆணாய் இருந்தாலே
மாமனின் மடியில் தூங்கி மகனாய் வாழாதா?
அண்ணனின் மகளும் வந்தாலே
அத்தை உன் மகளை கேட்டாலே
இன்னொரு ஜென்மத்துக்கு சொந்தம் தொடராதா ஓஹோ..
(குங்கும பூவே..)
படம்: கேடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ரஞ்சித், சின்மயி
Saturday, May 17, 2008
442. குங்கும பூவே மஞ்சள் நிலாவே
பதிந்தவர் MyFriend @ 10:40 AM
வகை 2000's, சின்மயி, யுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment