Wednesday, May 14, 2008

432. அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா




அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

( அள்ளித் தந்த)

சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்ந்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

(அள்ளித் தந்த)

காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம்தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ
விரியும் பூக்கள் வானங்கள்
விசிறியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை

(அள்ளித் தந்த)



படம் : நண்டு
இசை :இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

**

விரும்பிக் கேட்டவர்: விவ்ஸ்

6 Comments:

Anonymous said...

அருமையான திரை இசை பாடலை தந்தமைக்கு நன்றி. ஆனால் இந்த பாடலை எழுதியவர் பெயரை எழுத மறந்தது ஏனோ? வே. நடனசபாபதி

ILA (a) இளா said...

நன்றி கப்பி! ஒரு நாள்லேயேவா?

Anonymous said...

இதே திரைப்படத்தில் ”கைசே கஹூ(ம்) குச் கெஹ ந சகூ(ம்)” என்ற ஹிந்தி பாடல் உண்டு. தயவு செய்து அந்த பாடலை வரிகளுடன் உங்கள் தளத்தில் போடுமாறு கெட்டுக்கொள்கிறேன். அது மிகவும் அருமையான பாடல்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் விருப்பப்பாடல் இங்கே..
http://thenkinnam.blogspot.com/2011/08/blog-post_17.html

ஜெ. ராம்கி said...

எழுதியது யார் கண்ணன்

raj said...

மதுக்கூர் கண்ணன் பாடலாசிரியர்.

Last 25 songs posted in Thenkinnam