Saturday, May 3, 2008

407. கடலோடு நதிக்கென்ன கோபம்



கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப்பாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்ட பூவே
(கடலோடு..)

நீலவான மேகம் போல காதல் வானில் தவழுகிறேன்
நீரில் ஆடும் பூவைப்போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
நீலவான மேகம் போல காதல் வானில் தவழுகிறேன்
நீரில் ஆடும் பூவைப்போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வண்ண மோகினி வனிதாமணி
புதுமாங்கனி சுவை ஏதினி
புது வெள்ளம் போல வாராய்
(கடலோடு..)

குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
ததும்பிடவா அலையெனவே
ததும்பிடவா அலையெனவே
அமுத மழையில் நனைந்து இனிமை காணவே
(கடலோடு..)

மோக வேளை என்று உன்னை நானும் மீட்டி பாடிடவா
பாரிஜாத மாலை போல மார்பில் உன்னை சூடிடவா
தோகை நீயே மேடை நானே
மலர் வீசிடும் கணை பாயுது
மலர் மேனியும் துதி பாடுது
குளி ஓடை நீயே வா வா
(கடலோடு..)

படம்: அர்த்தங்கள் ஆயிரம் (1981)
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

விரும்பி கேட்டவர்: சுரேகா

1 Comment:

நிஜமா நல்லவன் said...

நல்ல பாட்டு. விரும்பி கேட்ட சுரேகா அண்ணாவுக்கும் பதிவிட்ட அன்புத்தங்கைக்கும் நன்றி.

Last 25 songs posted in Thenkinnam