Monday, May 12, 2008

427. மலர்களே மலர்களே இது என்ன கனவா




மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனது உள்ளம்
பெருகியதே விழி வெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
ஆஆஆ....
(மலர்களே..)

மேகம் திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வரவா
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா
என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவதும் முறையா
நினைக்காத நேரம் இல்லை காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே நதியே
என் ஸ்வாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா
(மலர்களே..)

பூவில் நாவில் இருந்தால் காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம்மில் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீளம் போலே இணைந்து கொண்டது இந்த உறவே
உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உன்னோடு உயிரை போலே புதைந்து போனது தான் உறவே
மறக்காது உன் ராகம் மறிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
(மலர்களே..)

படம்: லவ் பேர்ட்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, ஹரிஹரன்

விரும்பி கேட்டவர்: மங்களூர் சிவா

3 Comments:

மங்களூர் சிவா said...

மொதல்ல நன்றி

மங்களூர் சிவா said...

/

மேகம் திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து
மார்பில் ஒழித்து கொள்ள வா வா
மார்பில் ஒழிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒழிந்து கொள்ள வா வா
/

ஒழிச்சி கட்டிட்டிங்க போங்க

:: :: :: :: :: :::: :: :::: :: ::
மேகம் திறந்து வந்து உன்னில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வரவா
மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வா வா
:: :: :::: :: :::: :: :::: :: ::

Rajesh said...

ஊனோடு உயிரைப் போலே உறைந்து போனது தான் உறவே..

I think this one is the correct one..

Last 25 songs posted in Thenkinnam