வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
(வாழ்க்கையில்..)
வெற்றி கொடி கட்டு
மலைகளை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு
படையெடு படையப்பா
(வெற்றி..)
கைதட்டும் உளிப்பட்டு
நீ விடும் நெற்றி துளிப்பட்டு
பாறைகள் ரெட்டைப் பிளவுட்டு
உடைப்படும் படையப்பா
(கைத்தட்டும்..)
வெட்டுக்கிளியல்ல நீ ஒரு
வெட்டும் புலி என்று
பகைவனை வெட்டிதலைக்கொண்டு
நடையெடு படையப்பா
(வெட்டுக்கிளி..)
மிக்க துணிவுண்டு
இளைஞர்கள் பக்த துணையுண்டு
உடன்வர மக்கள் படையுண்டு
முடிவெடு படையப்பா
(வெற்றி..)
(வாழ்க்கையில்..) x2
இன்னோர் உயிரைக்கொன்று
புசிப்பது மிருகமடா
இன்னோர் உயிரை கொன்று
ரசிப்பவன் அரக்கனடா
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
(யாருக்கும்..)
நேற்று வரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா
(நேற்று..)
(வெற்றி..)
படம்: படையப்பா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஸ்ரீராம்
வரிகள்: வைரமுத்து
Tuesday, December 11, 2007
100. வெற்றி கொடி கட்டு...
பதிந்தவர் MyFriend @ 7:04 PM
வகை 2000's, AR ரஹ்மான், ரஜினி, ஸ்ரீராம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment