Thursday, December 27, 2007

154. செந்தாழம் பூவில் வந்தாடும்



செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
[செந்தாழம்பூவில்...]

பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

[செந்தாழம்பூவில்...]

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

[செந்தாழம்பூவில்...]

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

[செந்தாழம்பூவில்...]

படம்: முள்ளும் மலரும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ்
பாடலாசிரியர்: கண்ணதாசன்

2 Comments:

ஜே கே | J K said...

இத ஏன் பிடிக்கும்னு சொல்ல முடியல. அதென்னமோ தெரியல இந்த பாட்ட கேட்டாவே மனசு லேசாயிடுது.

ராஷித் அஹமத் said...

எத்தனை தலைமுறை கடந்தாலும் நல்ல ரசனையுள்ளவர்கள் மிக விரும்பும் ஒரு பாடல். இது எப்போதும் சூப்பட் ஹிட் தான். காலத்தால் அழியாத அழிக்கமுடியாத ஒரு அமுத கானம்.

Last 25 songs posted in Thenkinnam