ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
(ஏதோ..)
என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாவகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தேனூற்றும் ஞாபகங்கள் தீமூட்டும்
(ஏதோ..)
அம்மா கை கோர்த்து நடை பழகிய ஞாபகமே
தனியாய் நடைப்பழகி நான் தொலைந்தது ஞாபகமே
புத்தகம் நடுவில் மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
சின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
(ஏதோ..)
ரயில் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே
சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே
காகிதக் கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே
கட்டபொம்மனின் கதையைக் கேட்ட ஞாபகம்
அட்டைக் கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்
(ஏதோ..)
படம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
இசை: S.A. ராஜ்குமார்
பாடியவர்: சுஜாதா
Friday, December 7, 2007
77. ஏதோ ஒரு பாட்டு...
பதிந்தவர் MyFriend @ 3:30 PM
வகை 1990's, SA ராஜ்குமார், சுஜாதா
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
அம்மா கை கோர்த்து நடை பழகிய ஞாபகமே
தனியாய் நடைப்பழகி நான் தொலைந்தது ஞாபகமே
புத்தகம் நடுவில் மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
சின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
...
வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்????
Post a Comment