Thursday, December 20, 2007

127. என் கண்மணி என் காதலி...




என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நல்லா சொன்னீர் போங்கோ..

என் மன்னவன் என் காதலன்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி..

இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்..
இளமாலையில்..
அருகாமையில்..
வந்தாடும் வேளை இன்பம் கோடியின்று
அனுபவம் சொல்லவில்லையோ..
இந்தாம்மா கருவாட்டு கூடை.. முன்னாடி போ..
(என் மன்னவன்..)
என் கண்மணி..

தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கேட் இறங்கு..
மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் அன்று தறவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் நேரமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
(என் கண்மணி..)
(என் மன்னவன்..)

படம்: சிட்டுக்குருவி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P. சுசிலா, பாஸ்கர், கோவை பாபு
பாடலாசிரியர்: வாலி

விரும்பி கேட்டவர்: ஆயில்யன்

5 Comments:

ஆயில்யன் said...

தாங்க்ஸ் மை பிரெண்ட் :)

MyFriend said...

இளையராஜாவோட சூப்பர் கம்போஸிஷன்.. ரெண்டு குஅலுக்கும் நடுவே செய்த்ருக்கும் ஓவர்லேப் மிக்ஸிங் அருமை.. :-)

Anonymous said...

நேத்தூ தான் ஜி.ஆர் தளத்திலே கேட்டேன். நல்ல பாடல்.

VIKNESHWARAN ADAKKALAM said...

எனக்கும் பிடித்த பாடல்.... எஸ்.பி.பாலாவின் குறல் இனிமை...

CVR said...

இந்த பாட்டு பற்றிய இன்னொரு சுவையான பதிவு இங்கே

http://isaiarasi.blogspot.com/2007/07/12.html

Last 25 songs posted in Thenkinnam