Friday, December 21, 2007

132. மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்...




மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தமிடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டுப்பாடு
கதிர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டுவிடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டிபிடி
உலகமே என் வீடு இளமையே விளையாடு
(மலர்களே..)

நதிகளை மட்டுமல்ல நுரைகளையும் காதலித்தேன்
வெண்ணிலவை மட்டுமல்ல தரையையும் காதலித்தேன்
ஒரு பட்டு பூச்சியை காதலித்து பார்த்தேன்
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்
அந்தி வானத்தின் மேலே முகில் கூவுவதை போலவே
எந்தன் உடல் அங்கு பறந்திட வழி இல்லையா
(மலர்களே..)

மழைத்துளி மழைத்துளி முத்துக்களாய் சிதறுது
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது
அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு
அதில் ஒற்றை நிறத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு
சுகமானது பூமி இதமானது வாழ்க்கை
இந்த உலகத்தை ரசிக்கின்ற கலைஞன் இவன்
(மலர்களே..)

படம்: ஓன்ஸ் மோர்
இசை: தேவா
பாடியவர்: கிருஷ்ணராஜ்

2 Comments:

MyFriend said...

நல்ல பாட்டு.. ஆனால், ரொம்ப பேர் மறந்துட்ட பாட்டு. :-)

ரசிகன் said...

இதுவரை நான் கேட்டிறாத பாடல்.அருமையா இருக்கு...

Last 25 songs posted in Thenkinnam