Monday, December 24, 2007

141. யார் வந்து பூவுக்குள் கிச்சு கிச்சு மூட்டியதோ




யார் வந்து பூவுக்குள் கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே

யார் வந்து மனசுக்குள் புகை வண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எறிகிறதே
வண்ணத்து பூச்சிகள் வானவில்லை சூடியதோ
வாலிப திறைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில் சேர்ந்திட கூடும்

திசை மாறும் போதும் தென்றலும் பூக்களை மோதும்
(யார் வந்து..)

முதல் முதல் ஒரு ஓலை வந்ததோ
உயிர் வரை அது ஊடல் செய்ததோ
(முதல்..)
ஆடை மறைவு ஓடை மீன்கள்
பரதம் தானுடுதோ
ஓடும் முகிலை தேடி பிடித்து
வானம் முகம் மூடுதோ
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அலைப்போலே வந்து பாடுது காவடி சிந்து
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அடிப்போட்டால் கூட ஆனந்த மௌனம் இன்று

(யார் வந்து..)

புது புது ஒரு யுத்தம் வந்ததோ
புயல் மழை இடி போலெ வந்ததோ
(புது..)
சிட்டுக்குருவி சிறகை வாங்கி
பறக்கத்தான் தோன்றுதோ
வெட்ட வெளியில் எட்டுப்போட்டு
ஓடத்தான் தோன்றுதோ
சந்தோச போர்க்களம் ஆரம்பம்
மழைக்கொட்டும் போதும் வானத்தை பார்த்திட தோன்றும்
சந்தோச போர்க்களம் ஆரம்பம்
மல்லிகை பூவில் ஆடைகள் தைத்திட தோன்றும்

(யார் வந்து..)

படம்: கண்டேன் சீதையை
இசை: உதயா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

2 Comments:

MyFriend said...

உன்னி கிருஷ்ணனின் பல அருமையான பாடல்களில் இதுவுமொன்று..

சேதுவின் வெற்ற்க்கு பிறகு விகரமனின் மற்ற படங்களை தமிழில் டப் செய்தபொழுது இந்த தெலுங்கு படமும் டப் செய்யப்பட்டது.

கதையின் கரு வாடகைத்தாய் பற்றியது.

வேற்று மொழியிலிருந்து டப் செய்யும் சில பாடல்கள் எதிர்பாரா விதமாக மிக அருமையாக அமைந்த ஒரு பாடல் இது. :-)

ஜே கே | J K said...

ரொம்ப நாள் முன்னாடி கேட்ட பாடல்
அப்படியே மறந்த பாடல்.

நன்றி...

Last 25 songs posted in Thenkinnam