Thursday, December 20, 2007

128. இரு விழிகளும் விழிகளும் இணைந்தன







இரு விழிகளும் விழிகளும் இணைந்தன
இரு இமைகளும் இமைகளும் திகைத்தன
ஒரு வேதியல் மாற்றம் நேருதே
தட்பம் வெப்பம் தடுமாறுதேஏஏஏ.....

மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே (2)
இதுகீறலா மழைச்சாரலா
இதுகானலா இளவேனிலா
இதுமீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா

யாரிடமும் கண்டதில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல் (2)

நான் கண்கள் மூடிப் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன் (2)

கார்மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இன்று சில்லுச் சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று சில்லுச் சில்லாய் சிதறுதே

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்....

இதுகீறலா மழைச்சாரலா
இதுகானலா இளவேனிலா
இதுமீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா

மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே

நான் அறியாமல் எனை ரசித்தாய்
என் மெளனங்களை மொழிபெயர்த்தாய்

உன்னைக் கண்ட பின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர்பெறுதே
கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
வெட்கங்களும் வெளிவருதே

தரையினில் நின்றபோதும் மிதக்கிறேன்
அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னைத் தந்து உன்னை வாங்க வந்தேனே
இளவேனில் காற்றின் வெப்பம் தாக்க நின்றேனே

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்.... (2)

நான் கனவுகளை கண்டதில்லை
கனவாய் யாரிடமும் சென்றதில்லை

முன்னே பின்னே பார்த்ததில்லை
இருந்தும் மனம் உன்னை நாட
முன்னூறாண்டு ஒன்றாய் வாழ்ந்த
நியாபகத்தில் தடுமாற்

விரல்களின் மோதிரங்கள் நீக்கினேன்
உன் விரல் தேடிவந்து கோர்க்கிறேன்
இந்தச் சொல்லும் இந்தக் கணமும் நிற்கட்டும்
நமை வானம் வந்து ஈரக்கையால் வாழ்த்தட்டும்

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
நான் எனது ஏதுமில்லை இனிமேல்....

நான் கண்கள் மூடிப் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன் (2)

கார்மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இன்று சில்லுச் சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று சில்லுச் சில்லாய் சிதறுதே....

படம்: தொட்டி ஜெயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடினது: ரமேஷ் விநாயகம், ஹரிணி

2 Comments:

கப்பி | Kappi said...

இதையும் உயிரே என்னுயிரேவையும் அடுத்தடுத்து போட்டுடலாம்னு வச்சிருந்தேனே...ஜஸ்டு மிஸ் :))

btw..வருக :)

கார்த்திக் பிரபு said...

enakum romba puditha padal nandri for the lyrics neenga sondhama eludhneengalaa type adichu??

Last 25 songs posted in Thenkinnam