Monday, December 24, 2007

142. முத்து மணி சுடரே...



ரஜினி அங்கிள்............

முத்து மணி சுடரே வா...
முல்லை மலர் சரமே வா...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ

[முத்து மணி...]

ம்ஹ்ஹூஊம் நான் தூன்க மாட்டேன்...
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே...
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே...
அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
தானாக தள்ளாடும் பூவண்ணமே...
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்...

ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே...
கண்ணே என் பொண்ணே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே...
தன் வழி போனாளே...கனிமொழி எங்கே...
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி...
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...

[முத்து மணி...]

படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J. யேசுதாஸ்

1 Comment:

Anonymous said...

இதில் சின்ன குழந்தையாக ரஜினியுடன் நடித்த மீனா பின் அவருடனே ஜோடியாகவும் நடித்தார்....

Last 25 songs posted in Thenkinnam