இரவா பகலா குளிரா வெயிலா
என்னை ஒன்றும் செய்யாதடி
கடலா புயலா இடியா மழையா
என்னை ஒன்றும் செய்யாதடி
ஆனால் உந்தன் மௌளனம் மட்டும் ஏதோ செய்யுதடி
என்னை ஏதோ செய்யுதடி காதல் இதுதானா
சிந்தும் மணிபோலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின் மனமும்
என்றும் ரகசியம்தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா
(இரவா பகலா குளிரா வெயிலா)
என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லயா
என்னை சுடும் காதல் உன்னை சுடவில்லயா
என்னில் விழும் மழை உன்னில் விழவில்லயா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழவில்லயா
முகத்திற்கு கண்கள் ரெண்டு
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு
இப்பொது ஒன்றிங்கு இல்லையே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
தனிமையிலே தனிமையிலே
துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
(இரவா பகலா குளிரா வெயிலா)
வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு
வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
மலையினில் மேகம் தூங்க
மலரினில் வண்டு தூங்க
உன் தோளிலே சாய வந்தேன்
சொல்லாத காதலை சொல்லிட
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லிச் சொல்லி நெஞ்சுக்குள்ள என்றும் வசிப்பேன்
அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சிக் கொஞ்சி நெஞ்சுக்குள்ள உன்னை அணைப்பேன்
(இரவா பகலா குளிரா வெயிலா)
படம்: பூவெல்லாம் கேட்டுப்பார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: சுஜாதா, ஹரிஹரன்
பாடலாசிரியர்: பழனி பாரதி
விரும்பி கேட்டவர்: ஆயில்யன்
Saturday, December 22, 2007
134. இரவா பகலா குளிரா வெயிலா...
பதிந்தவர் MyFriend @ 8:16 AM
வகை 1990's, சுஜாதா, யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஹரன்
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
சூப்பர் பாட்டு ஆயில்யன். :-)
மனதை வருடும் பாட்டு. :-)
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று .... பதிந்தமைக்கு நன்றி தோழர்களே!
//PRINCENRSAMA said...
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று .... பதிந்தமைக்கு நன்றி தோழர்களே!
//
:-)
imeem பாட்டும் கூட ஓடுவதால் ஒரே குழப்பமாக இருக்கு ஆடியோ.
@வடுவூர் குமார்:
சரி செய்தாச்சு. நன்றி. :-)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
சூப்பர் பாட்டு ஆயில்யன். :-)
மனதை வருடும் பாட்டு. :-)
//
நன்றி
உங்க்களுக்கு தெரியுமா?
இந்த பாட்டு நம்ம அபி அப்பாவுக்கும் ரொம்ப்ப்ப்ப பிடிக்குமாம்!
லீவு நாட்களில் இந்த பாட்டைத்தான் முணுமுணுத்துக்கொண்டிருப்பாரம் :)))
Boss Idhu ennoda song... :-)
I use to sing this 4m 200?
don't remember the in date. :-)
Post a Comment