படம் : நல்லவனுக்கு நல்லவன் (1984)
பாடியவர்கள் : KJ யேசுதாஸ், மஞ்சுளா
இசை : இளையராஜா
உன்னைதானே.. தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
(உன்னைதானே)
மனதின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
முத்தம் கொடுத்தானே இதழ் முத்து குளித்தானே
இரவுகள் இதமானதா
கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா
என்னைதானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு
(என்னைதானே)
உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வின் முறையானது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே
(என்னைதானே)
7 Comments:
அருமையான பாடல்...ரஜினி, ராதிகா நடிப்பும் கூட இப்பாடலுக்கு மெருகு ஏற்றும்...
சிறுவயதிலே கேட்ட பிடித்ததால், ரஜினி பாடும் வரிகள் மனப்பாடம்...முழு பாடலையும் தந்திருக்கிறீர்கள் நன்றி..
ஒரு சின்ன ரோசனை..அப்படியே பாட்டு எழுதினவங்க பேரையும் போடுங்க... :))))
இந்த படத்திலே ரஜினி அனிந்து வரும் லெதர் டிரெஸ் ஒரு டிரெண்ட் செட்டர்..ஏனோ..இப்போது உள்ள படங்களிலே அதைப் பார்க்க முடிவதில்லை...
கிழிஞ்சது லம்பாடி லுங்கி என்று ஒய்.ஜி.மகேந்திரன் அடிக்கடி சொல்லுவார்...
கார்த்திக் ஆண்டி ஹீரோ மாதிரி ஆரம்பிச்சு..பின்னாடி திருந்திடுவார்...
ரஜினி முடி வாரும் பாணி அப்போவும் ரொம்ப பாப்புலர்...எண்ணெய் தடவாதவன் கூட எண்ணெய் தடவி, படிய ஒரு பக்கமா வாரி விட்டுக்குவோம்...(7 வயசு)
மலரும் நினைவுகள் போட வாய்ப்பு தந்தமைக்கு நன்றி...நன்றி...நன்றி...
சூப்பர் :))))))))))))))
Post a Comment