ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்ல கோபம்
பெண்: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே
(பேருந்தில்)
ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் வருகிற முதல் கூச்சம்
பெண்: பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
ஆண்: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
பெண்: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
(பேருந்தில்)
(பேருந்தில்)
ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெண்: தேய்பிறை போல் படும் நகக் கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
ஆண்: செல்ஃபோன் சிணிங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
பெண்: எழுதும் கவிதையின் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
(பேருந்தில்)
(பேருந்தில்)
படம்: பொறி
இசை: தினா
பாடியவர்கள்: M.பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ
Tuesday, December 4, 2007
61. பேருந்தில் நீ எனக்கு
பதிந்தவர் இம்சை அரசி @ 12:46 PM
வகை 2000's, M.பாலகிருஷ்ணா, தினா, மதுஸ்ரீ
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
நாங்களும் உங்க ஸ்பிடுக்கு இக்வெலா 61 போஸ்ட் போட்டிட்டோம்...
பாட்டு கேட்டிட்டு வரேன்
இப்படி ஒரு நல்ல பாட்டு அப்படி ஒரு மொக்கை படத்தில்....
Post a Comment