Hati Aku Suka-va
Lalu Aku Cinta-va
Hati Aku Suka-va
Lalu Aku Cinta-va
Saya pandang Dirimu
Saya Berhari-hari Hidupkah
Pada Sorang hati Pada mu
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
( என் உயிர்..)
பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே
Avak Cantik Macam
Bungaraya
Jangan Lupa
Sama Saya
(பூங்கொடி..)
நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்
(என் உயிர்..)
பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே
Hati Kita Dua-Dua
Orang Sajala Dua Dua
நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்
(என் உயிர்..)
படம்: ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஜான்ஸி, KJ ஜேசுதாஸ்
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
விரும்பி கேட்டவர்: முத்துலெட்சுமி
Thursday, December 20, 2007
130. என் உயிர் நீதானே...
பதிந்தவர் MyFriend @ 5:09 PM
வகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, ஜான்ஸி
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
முத்துக்கா, மலாய் பாட்டெல்லாம் கேட்பீங்கன்னு சொல்லவே இல்ல.. ;-)
நன்றி மைஃபிரண்ட்.
ஆனா மலாய் வார்த்தையைக்கூட தமிழிலேயே எழுதி இருக்க்லாம் இல்லயா.. முழுக்க முழுக்க பாட்டை தமிழில் எழுதியதா இருக்கட்டுமே...
ஹட்டி அக்க சுக்காவா அப்படி...:)
அம்மாடி அப்படியே அதுக்கு என்ன அர்த்தம்ன்னு சொல்லிட்டேன்னா நல்லாருக்கும்..
மலாய் வார்த்தையை அப்படியே மலாயிலேயே போட்டுடலாம் என்று நினைத்தேன்.
சரி மீனிங்தானே! போட்டுடுவோம். ;-)
//Hati Aku Suka-va
Lalu Aku Cinta-va//
என் இதயத்துக்கு பிடிச்சிருக்கு..
அதனால் உன்னை காதலிக்கிறேன்.
//Saya pandang Dirimu
Saya Berhari-hari Hidupkah
Pada Sorang hati Pada mu//
நான் உன்னை பார்க்கிறேன்
தினம் தினம் பிறக்குறேன்
என் இதயம் உன்னிடம்தானே..
//Avak Cantik Macam
Bungaraya
Jangan Lupa
Sama Saya//
நீ செம்பருத்தி பூபோலவே அழகு
என்னை ன்றும் மறந்துடாதே
//Hati Kita Dua-Dua
Orang Sajala Dua Dua//
நம் இதயம் ஒன்றோடு ஒன்று
உடல் மற்றும்தான் இரண்டு
ஆகா எத்தனை அருமையான வரி.. நான் உன்னைப்பார்க்கிறேன்.. தினம் தினம் பிறக்கிறேன்.. பாத்தியா இதெல்லாம் முன்னாடி எங்களுக்கெப்படி தெரியும் ... நன்றி நன்றி...
Post a Comment