Monday, December 3, 2007

54. என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை..




என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா
கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ
அதை எப்படிச் சொல்வேனோ

அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
(என்னவென்று..)

தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
கொத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தோக்கும் தாமரை
வண்ணப் பூவின் வாசம்
வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்
(என்னவென்று..)

கண்ணோடு ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீராடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்
(என்னவென்று..)

படம்: ராஜக்குமாரன்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

1 Comment:

Anonymous said...

அருமை அருமை

Last 25 songs posted in Thenkinnam