Tuesday, December 4, 2007

63. கடவுள் அமைத்து வைத்த மேடை



கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

(கடவுள்)

நான் ஒரு விகடகவி
இன்று நான் ஒரு கதை சொல்வேன்
ஓங்கிய பெரும் காடு
அதில் உயர்ந்தொரு ஆலமரம்
ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே

ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு
அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு
அன்பே...ஆருயிரே...என் அத்தான்

(கடவுள்)

கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா
ஆசை விமானத்தில் ஆனந்த மேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா
தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா
சிங்கார காலோடு சங்கீத தங்கைகள் சந்தோஷம் பாடுதம்மா

(கடவுள்)

கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா
கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா
wish you both happy life happy happy married life
பண்பான வேடத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓடுதம்மா
பண்பான வேடத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓடுதம்மா
பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா

(கடவுள்)

ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா
அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா
அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான் இப்போது தெரிந்ததம்மா

(கடவுள்)

குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வரிகள்: கண்ணதாசன்
இசை: M.S.விஸ்வநாதன்
படம்: அவள் ஒரு தொடர்கதை

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam