தப்பு தாளம் படத்தில் கவியரசர் கண்ணதாசனின் வரிகளில் பாலுவின் வசிகர குரலில் அமைந்த பாடல் இது.
என்னடா பொல்லாத வாழ்க்கை?
அட என்னடா பொல்லாத வாழ்க்கை !
யாரை நெனச்சு நம்ம பெத்தாலோ அம்மா
அட போகும் இடம் ஒன்னு தான் விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அல்ட்டிக்கலாமா
(என்னடா)
காடாறு மாதம் அப்பா
நாடாறு மாதம் அப்பா
ராஜாக்கள் கதை இது தான்ப்பா
நம்ப நிலை தேவலையப்பா
முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு!
இல்லை ஓடுற வரைக்கும் ஓடு !
இதுக்கு போய் அலட்டிக்கலாமா!
இதுக்கு போய் அலட்டிக்கலாமா!
(என்னடா)
படிக்க ஆசை வச்சேன் முடியல
உழைச்சு பார்த்துப்புட்டேன் தெரியல
படிக்க ஆசை வச்சேன் முடியல
உழைச்சு பார்த்துப்புட்டேன் தெரியல
இதுக்கு காரணம் தான் யாரு
படைச்ச சாமிக்கிட்டா போய் கேளு ?
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
(என்னடா)
நான் செய்யுறேன் தப்புதண்டா!
வேற வழியெதும் உண்டா?
ஊருக்குள்ளே யோக்கியனை கண்டா
ஓடி போயி என்னிடம் கொண்டா!
கிடைச்சா கிடைக்கிறவரைக்கும் பாரு,
பிடிச்சா திருட்டுப் பட்டம் நூறு
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
படம்:- தப்புதாளங்கள்
இசை:- MSV
பாடல்:- கண்ணதாசன்
பாடியவர்:-SP.பாலசுப்ரமணியம்
Wednesday, December 12, 2007
105.என்னடா பொல்லாத வாழ்க்கை
பதிந்தவர் இராம்/Raam @ 2:05 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
என்ன ஒரு தத்துவம் பாருய்யா ராயல்..
இதுக்கு போய் அலட்டிக்கலாமா :)
ப்ரீயா விடு
அருமையான பாடல் நானும் உங்க பங்காளியா இருக்கேனே. எனக்கும் இந்த தளத்தின் அழைப்பிதல் அனுப்புங்களேன். என் மின்முகவரி.
rraveendran_citcivil@yahoo.com
Hai Raam Sir,
Thanq very much for your invitaion. I will post weekly one post in this site. Ok. All the best.
Post a Comment