பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனத்ததின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னதுக்கு?
(பச்சைக் கிளிகள்..)
அந்த விண்ணில் ஆனந்தம்
இந்த மண்ணில் ஆனந்தம்- அடி
பூமிப் பந்த முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம்
மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம்
வாழ்வே பேரானந்தம் பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்!
(பச்சைக் கிளிகள்..)
உன் மூச்சில் நான் வாழ்ந்தால்
என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில்
உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓர் ஆனந்தம்
பந்தம் பேரானந்தம்
கண்ணே உன் விழியால் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
(பச்சைக் கிளிகள்..)
படம்: இந்தியன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: K.J. ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து
Saturday, December 8, 2007
80. பச்சைக் கிளிகள் தோளோடு...
பதிந்தவர் MyFriend @ 12:24 PM
வகை 1990's, AR ரஹ்மான், KJ ஜேசுதாஸ், வைரமுத்து
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
//வாழ்வில் நூறானந்தம்
வாழ்வே பேரானந்தம் //
//கண்ணே உன் விழியால் பிறருக்கு அழுதால்
கண்ணீரும் ஆனந்தம்//
அருமையான வரிகளில் ஆனந்தம் கொண்டுவரும் அழகிய பாடல்
நன்றி!
//மழையில் கூடச் சாயம்போகா வானில் ஆனந்தம்//
வானவில் ஆனந்தம் :)))
//வேதா said...
பாட்டு அருமை எழுதியவர் யாருன்னு சொல்லவே இல்லையே :)
//
வைரமுத்து தானே...????
Post a Comment