தேன் கிண்ணம் ரசிகர்கள் அனவருக்கும் என் வணக்கம். தமிழ்மண பதிவாளர்கள் மற்றும் வாசகர்கள் என்னன தெரிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். வற்றாயிருப்பு சுந்தர் அவர்களின் பாடும் நிலா பாலு தளத்தில் என் அபிமான பாடகர் எஸ்.பி.பி அவர்களின் பாடல்கள் சில வற்றை பதிந்து வருகின்றேன். இதோ இங்கே மற்ற ஜாம்பவான்களின் குரல்கள் என்னை பல நேரங்களீல் மயக்கியது உண்டு. அந்த பல பாடல்களை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். இதோ தாஸண்ணா அவர்களீன் முதல் பாடல் கேட்டு மகிழுங்கள்.
ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன
ஹெ சமுதாயமே...
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
அத்தன பழமும் சொத்தைகள் தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப் பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்கள் ஏற்றிய குற்றத்தை
மறந்து முதுகை பாருங்கள்
முதுகினில் ஆயிரம் அழுக்கு
அதனை கழுவுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில் மற்றும்
மூன்று விரல்கள் உங்கள் மார்ப்பினை காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போது இந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எ..ம..னு..க்கும் வெட்கமில்லை
படம்: யாருக்கும் வெட்கமில்லை
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இசை: ஜி.கே,வெங்கடேஷ்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
7 Comments:
வாங்க கோவை ரவி :)
Dear Ravi ,
This “ oorukku vetkamillai “ is wonderful
I am expecting more from you ……
Regards,
b.Nandhakumar
Dear Sir
Very good work sir. It is a good quality by being a fan of baluji and appreciating others songs and also posting them for others to enjoy.
Keep it up.
Regards
N. Ramanathan
கப்பி சார், நந்தகுமார் சார் மற்றும் ராமனாதன் சார்
வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.
நன்றி கோவை ரவி, இந்த பாடலை ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன்.
இதோ தாஸண்ணா அவர்களீன் முதல் பாடல் -i think it is the first song by jesudoss in thenkinnam.actually jesudoss first song is neeyum bommai naanum bommai in the film bommai
Exactly.
Post a Comment