கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
என்றும் வாழணும் நூறு ஆண்டு
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்
வாழ்ந்து விடை பெறுவோம்
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ....... ம்..ம்ம்..
எதுவரை வாழ்க்கை அழைகிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடை பெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம்
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே
(கடவுள் தந்த அழகிய...)
நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது
கோடையில் இன்று இலை உதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ...
(கடவுள் தந்த அழகிய ...)
படம்: மாயாவி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: SPB சரண், கல்பனா
பாடலாரியர்: பழனி பாரதி
விரும்பி கேட்டவர்: ஆயில்யன்
Monday, December 24, 2007
143. கடவுள் தந்த அழகிய வாழ்வு
பதிந்தவர் MyFriend @ 8:30 PM
வகை 2000's, SPB சரண், கல்பனா, தேவிஸ்ரீ பிரசாத்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
//எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்
வாழ்ந்து விடை பெறுவோம்//
மிகச்சரியான வார்த்தை.. :-)
உருக வைக்கும் உண்மையான வாழ்வின் நிஜங்கள்
கேட்கும் போதே மனசு நெகிழும்.
தேங்க்ஸ் அனு
//எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்
//
எனக்கு பிடித்த வரிகளில் இதுவும்
நன்றி என இனிய நண்பா !
//எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில்
//
மனதில் நிறுத்தி வைத்து கொள்ள வேண்டிய வரிகளில் இதுவும்....!
Post a Comment