Monday, December 10, 2007

91. ஜகமே தந்திரம் சுகமே மந்திரம




சம்போ சிவசம்போ சிவசம்போ சிவசம்போ
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்
மனிதன் யந்திரம் சிவசம்போ
நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை
தினமும் நாடகம் சிவசம்போ


மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்
மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு


அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே


கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாளின்று
காலங்கள் போனாலோ தின்னானே என்பார்கள்
மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு
மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு



படம் : நினைத்தாலே இனிக்கும்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்

2 Comments:

ஆயில்யன் said...

//மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்//

எம் தலைவனின் தத்துவ வரிகளாய்......! சூப்பர் :)))

நாகை சிவா said...

செம பாட்டு கப்பி :)

Last 25 songs posted in Thenkinnam