ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி! (2)
பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!
(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!
(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!
(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)
படம் : படிக்காதவன்
இசை: இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து
Wednesday, December 12, 2007
106. ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
நல்ல பாடல் கப்பி :)
//நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!//
ஏணி எட்டி உதைத்த பிறகு தான் எல்லாமே புரியுது என்பதை ஒரு வார்த்தைல கொண்டு வந்துட்டாரு வைரமுத்து.
//சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!//
சத்தியம்
//அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி //
சூப்பர் வரி
Post a Comment