Thursday, December 6, 2007

70. காலங்களில் அவள் வசந்தம்...



காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்களில்..)

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
ஓ..
(பறவைகளில்..)
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
(காலங்களில்..)
(காலங்களில்..)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
(பால் போல்..)
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை
(காலங்களில்..)
(காலங்களில்..)

படம்: பாவ மனிப்பு
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: PB ஸ்ரீநிவாஸ்
வரிகள்: கண்ணதாசன்

2 Comments:

நாகை சிவா said...

அட பழையதிலும் அசத்துறீங்களே :)

வேதா said...

சூப்பர் பாட்டு :)

Last 25 songs posted in Thenkinnam