Saturday, December 1, 2007

44. முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா..



முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப்பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ஷிப்பா
(முஸ்தபா..)

ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
ஜூனியருக்கும் சீனியருக்கும்
கல்லூரி சாலை எங்கும் ragging நடக்கும்
ஸ்டூடன்ஸ் மனம் ஒரு நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே..
(முஸ்தபா..)

இங்கு பறக்கும் வண்ணப்பறவை
எங்கிருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கண்ணி மலர்கள் கூட படிக்கும்
காளை மனதில் சாறல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்

கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளி திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி
(முஸ்தபா..)

படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்

2 Comments:

MyFriend said...

my all time favourite. :-)

நாகை சிவா said...

கல்லூரியில் நடந்த மூன்று ஆண்டுகள் ஃபேர்வெல்லிலும் கடைசி பாட்டு இந்த பாட்டு தான். :) அந்த வருட மாணவர்கள் அனைவரையும் மேடை ஏற்றி விடுவோம். :)

கல்லூரியில் நடக்கும் எந்த கலைவிழாவாக இருந்தாலும் இந்த பாட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது நாங்கள் இருந்த வரை எழுதப்படாத விதி!

Last 25 songs posted in Thenkinnam