Tuesday, December 25, 2007

145. அன்பே அன்பே என் கண்ணே நீதானே...



அன்பே அன்பே என் கண்ணே நீதானே
மூச்சுக் காற்றாய் நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

(அன்பே..)

காதல் ஒரு பரிட்சைதானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம்தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்கச் சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

(அன்பே..)

சிலுவை சுமந்தானே
அவன் இந்தக் காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்ன
வாழ்க்கையில் வாய்வழி சொல்வானே
இதயம் ஒருநாள் இரண்டாய் உடையும்
அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடிப்போ..
(அன்பே..)
(காதல் ஒரு..)
(அன்பே..)

முள்ளாய் நீ வந்தால்
கண்கள் திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்

கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணைக்கொலைதான் செய்யாமல் சென்றாய்
மல்ர்மாலையாய் மாறிடவே நினைத்தேன்
மலர் வளையமாய் நான் மாறினேன்
(அன்பே..)

படம்: உள்ளம் கொள்ளை போகுதே
இசை: கார்த்திக் ராஜா
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

1 Comment:

MyFriend said...

காதல் வலியை அழகாய் உணர்த்துகிறார் உன்னிகிருஷ்ணன் அவரது குரலில். :-)

இதுவும் பல பேர் மறந்து போன பாடல்களில் ஒன்று. ;-)

Last 25 songs posted in Thenkinnam