Sunday, December 9, 2007

84. சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு...



சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு
அட கலக்குது பார் இவ ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு
இவ ஓக்கேன்னா அடி தூளு…
(சிக்குபுக்கு)

சின்னப்பொண்ணிவ படிப்பது எத்திராஜா
மனசையெல்லாம் சலவை செய்யும்
சொட்டு நீலமிவ பார்வையில் உருவாச்சா
வயசுப்பசங்கள விழியில புடிச்சா
(சிக்குபுக்கு)

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா
நீங்க மோட்டார்பைக்கத்தான் பார்ப்பீங்க
நாங்க மோட்டார்பைக்கிலே வந்தாக்கா
நீங்க மாருதிக்கு மாறுவீங்க
நாங்க ஜீன்ஸ் பேண்டுத்தான் போட்டாக்கா
நீங்க பேகி பேண்டுத்தான் பார்ப்பீங்க
நாங்க பேகி பாண்டுத்தான் போட்டாக்கா
நீங்க வேட்டியத்தான் தேடுவீங்க
ஒண்ணுமே வெவரங்கள் புரியல்லே
என்னத்தான் புடிக்குமோ தெரியல்லே
அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு
மொத்தத்தில் பைத்தியம் புடிச்சாச்சு
(சிக்குபுக்கு)

நாங்க ஆடிப்பாடித்தான் களச்சாச்சு
இங்க அலஞ்சு திரிஞ்சிதான் வெறுத்தாச்சு
இப்போ குழம்பி குழம்பித்தான் முடிபோச்சு
வாலிபந்தான் திரும்ப வருமா
ஒங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள
டௌரி அதிகம் கேட்கலாம் ஆண்பிள்ள
அத வச்ச பின்புதான் பூமால
அப்படியொரு அவதி ஏம்மா?
இப்பவே கெடச்சத லவ் பண்ணா
நிக்கலாம் செலவின்றி மணப்பெண்ணா
அப்புறம் அவஸ்தைகள் கிடையாது
அப்பனின் சேமிப்பும் குறையாது
(சிக்குபுக்கு)

படம்: ஜென்டில்மேன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுரேஷ் பீட்டர்ஸ், GV பிரகாஷ்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam