Sunday, December 2, 2007

47. ரோஜா தோட்டம் பூக்கள் தூவி வாழ்த்து கூறும்..



ஆ&பெ: டோலி டோலி டோலிரே..
டோலி டோலி டோலி டோலி டோலிரே..
(டோலி..)

ஆ: ரோஜா தோட்டம் பூக்கள் தூவி வாழ்த்து கூறும்
சொர்க்கம் வந்து எங்கள் வீட்டில் தீபம் ஏற்றும்
ஒரு நாள்தானே ஒரு பண்டிகை கொண்டாட்டும்
எங்கள் வான் மீது தினம் பௌர்ணமி வந்தாடும்
வர்ணங்களாக தனித்து வந்தோம்
வானவில்லாக சேர்ந்து நின்றோம்..

ஆ&பெ: (டோலி...)

ஆ: நட்பென்ற ஒற்றைச் சொல்லின் உள்ளே சென்றூ பார்த்தோமே..
தாய்ப்பாசம் தந்தைப்பாசம் ரெண்டும் அங்கே கண்டோமே..
அத்தனை சொந்தமும்.. ஓஓஓ..ஆஸ்தியில் கலந்தது.. ஓஓஓ..
நட்பெனும் சொந்தமே.. ஓஓஓ.. அஸ்தியில் கலப்பது.. ஓஓஓ..
ஒரு சின்ன வேதனை வந்தாலும்
தலை கோதுங்கின்ற கை நண்பன் கை..
நாம் என்ன சாதனை செய்தாலும்
அது நண்பன் தருகிற நம்பிக்கை..
கண்ணனுக்கு கோயிலுண்டு..
கர்ணனுக்கு ஏனில்லை.
நட்புக்கொரு கோயில் கட்டு
அதிலொன்றும் தவறில்லை..
எங்களின் வீடு இன்று ஒரு ஏழை நிலாதான்..
எங்களின் பின்னால் நட்புக்கொரு தாஜ்மஹால்தான்

ஆ&பெ : (ரோஜா தோட்டம்..)

பெ: ஆனந்த சொர்க்கம் சொர்க்கம் அன்பில் சேரும் கல்யாணம்
என் காதல் சொர்க்கம் என்று என்னை வந்து கை சேரும்?

ஆ: பெண்களின் கனவுகள்.. ஓஓஓ.. ரகசியமானது.. ஓஓஓ.
ஆண்களின் கனவுகள்.. ஓஓஓ.. லட்சியமானது.. ஓஓஓ...
நம் கண்கள் காண்கின்ற கனவெல்லாம்
அதிகாலை தாண்டினால் நிக்காது
நம் உள்ளம் காண்கின்ற கனவெல்லாம்
எந்த காலமாயினும் தோற்காது..

பெ: இந்த ஒரு வார்த்தை கேட்க என்ன தவம் செய்தேனோ
இந்த ஒரு நாளே போதும் ஏழு ஜென்மம் கேட்பேனோ..
நம்மிள் யாரும் டைரிகள் எழுதுவதில்லை..
மறைக்கிற விஷயம் ஒன்றுமே நம்மிடம் இருந்ததே இல்லை..

ஆ: ஒவ்வொரு நாளும் நம்மனதில் பூக்களின் வாசம்
நாமிருந்தாலே பூமி அது புன்னகை தேசம்..
(ரோஜா தோட்டம்..)

ஆ&பெ: (வர்ணங்களாக...)
(டோலி..)

பாடகர்: உன்னிகிருஷ்ணன், ஹரிஷ் ராகவேந்திரா, ஸ்வர்ணலதா, Dr. நாராயணன்
இசை: S.A. ராஜ்குமார்
படம்: புன்னகை தேசம்

2 Comments:

MyFriend said...

//ஒரு சின்ன வேதனை வந்தாலும்
தலை கோதுங்கின்ற கை நண்பன் கை..
நாம் என்ன சாதனை செய்தாலும்
அது நண்பன் தருகிற நம்பிக்கை..
//

அருமையான வரிகள்.. :-)

Anonymous said...

Yes bro nice lyrics 💯

Last 25 songs posted in Thenkinnam