யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை
இனம் காண முடியாது
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட நதி நீரை
அடையாளம் தெரியாது
உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்
உப்பில்லாமல் என்னாகும்
உப்பைப்போல நட்பை எண்ணுவோம்
(யாரோ..)
வார்ஷிப் என்றும் நீரில் ஓடும்
ஸ்பேஸ்ஷிப் என்றும் வானில் ஓடும்
ஃபிரண்ட்ஷிப் ஒன்றுதான் என்றும்
நெஞ்சில் ஓடுமே
ஹோ ஹோ ஹோ..
ஃபிரண்ட்ஷிப் என்றும் தெய்வம் என்று
வொர்க்ஷிப் செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோவில் ஆகுமே
ஒருவர் மீது ஒருவன் இங்கு
காதல் கொண்டு வாழ்கின்றோம்
காதல் என்றால் கொச்சையாக
அர்த்தம் செய்ய கூடாது
நண்பா வா.. ஹேய்..
(யாரோ..)
எங்கும் திரியும் இளமை தீயாய்
என்றுமே எரியும் இனிமை தீயாய்
கண்ணீர் அவிக்குமா
வீசும் காற்றும் அணைக்குமா
ஹோ ஹோ ஹோ..
என்னை கண்டா தன்னந்தனியா
எட்டி போகும் சிக்கன்குனியா
எங்கும் செல்லுவோம் நாங்கள்
என்றும் வெல்லுவோம்
நாட்டில் உள்ள கூட்டணிப்போல்
நாங்கள் மாற மாட்டோமே
நட்பு என்னும் சத்தியத்தை
நாங்கள் மீற மாட்டோமே
நண்பா வா.. ஹேய்.. ஹேய்..
(யாரோ..)
படம்: சென்னை 600028
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: வெங்கட் பிரபு, SPB சரண்
வரிகள்: வாலி
Sunday, December 2, 2007
48. யாரோ யாருக்குள் இங்கு யாரோ...
பதிந்தவர் MyFriend @ 12:36 PM
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
//வார்ஷிப் என்றும் நீரில் ஓடும்
ஸ்பேஸ்ஷிப் என்றும் வானில் ஓடும்
ஃபிரண்ட்ஷிப் ஒன்றுதான் என்றும்
நெஞ்சில் ஓடுமே
//
இந்த பாடலில் எனக்கு பிடித்த வரி. :-)
பழசு புதுசுனு ரவுண்ட் கட்டி ஆடுறீங்க...
:) நல்ல பாடல்
சூப்பர் சாங் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
//சூப்பர் சாங் எனக்கும் ரொம்ப பிடிக்கும்//
ரிப்ப்பீட்ட்டேஏஏய்ய்ய்ய்ய்ய்
அட! நன்றி!! :)
நல்ல பாட்டு!!!
எங்கள் நண்பர்கூட்டத்தின் தீம் ஸாங்க் இது..
கலக்குங்க..!!
Post a Comment