கோயிலிலே சாமிக்கும் கூட்டத்து மனுசருக்கும்
வாயுள்ள ஆட்களுக்கும் வசதியுள்ள பேர்களுக்கும்
வணக்கமய்யா வணக்கம் சொன்னேன்
நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு
ஊருக்குள்ள எனக்கொரு பேருண்டு (2)
என்னைப் பத்தி ஆயிரம் பேரு
என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க (2)
( நாட்டுக்குள்ள )
நாலு படி மேலே போனா நல்லவனை விடமாட்டாங்க
பாடுபட்டு பேரை சேர்த்தா பல கதைகள சொல்வாங்க
யாரு சொல்லி என்ன பண்ண நானும் இப்ப நல்லாயிருக்கேன்
உங்களுக்கும் இப்ப சொன்னேன் பின்னால பார்க்காத முன்னேறு முன்னேறு
(நாட்டுக்குள்ள)
ஆளுக்கொரு நேரமுண்டு அவுகவுக காலமுண்டு
ஆயிரம்தான் செஞ்சாக்கூட ஆகும்போது ஆகுமண்ணே
மூடனுக்கும் யோகம் வந்தா மூணுலகம் வணக்கம் போடும்
நம்பிக்கையை மனசுல வச்சு பின்னால பார்க்காத முன்னேறு முன்னேறு
(நாட்டுக்குள்ள)
படம் : பில்லா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எல்.ஆர். ஈஸ்வரி
Monday, December 10, 2007
95. நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு
பதிந்தவர் கப்பி | Kappi @ 10:26 PM
வகை 1980's, MS விஸ்வநாதன், SP பாலசுப்ரமணியம், கண்ணதாசன், ரஜினி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment