Tuesday, December 4, 2007

62. பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்...



பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
(பூமிக்கு..)
நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை
(பூமிக்கு..)

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே
(பூமிக்கு..)

படம்: டிஸ்யூம்
இசை: விஜய் அந்தோனி
பாடியவர்கள்: காயத்ரி, ராகுல் நம்பியார்

2 Comments:

நாகை சிவா said...

நான் சொல்வது எல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறு ஏதும் இல்லை

என்பதை விட்டுட்டீங்க... ;)

இந்த பாடலில் வரும் பெண்க் குரல் எனக்கு பிடிக்கும். சுபா வா இருக்கும் என்று நினைச்சுட்டு இருந்தேன்.

Boston Bala said...

எனக்கு பிடித்த பாடல்... நன்றி

Last 25 songs posted in Thenkinnam