Thursday, December 6, 2007

73. நிறம் பிரித்து பார்த்தேன்...





நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசை ஓ..
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ..
(நிறம்..)

எந்த மேகம் எந்த ஊரில் இன்று சேர்ந்து பொழியும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்?
எந்த கல்லில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்?
காலமே படைத்தது காலமே மறைத்தது
நாளைகள் என்பது நாளைதான் உள்ளது
காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும்
அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும்
(நிறம்..)

ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும்
எல்லாமே எல்லாமே நம் கையிலே?
வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேரும்
எல்லாமே எல்லாமே யார் கையிலே?
வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம்
காலமும் காதலும் தோழமை ஆகலாம்
முத்துச்சிற்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை
மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே அலைகடல் ஓசை
(நிறம்..)

பாடகர்: சுஜாதா
இசை: இளையராஜா
படம்: டைம் (1999)
வரிகள் : பழனிபாரதி

1 Comment:

நாகை சிவா said...

டைம் படத்துக்கு ராஜா வா இசை.. இது தெரியாம இருந்துட்டேனே....

Last 25 songs posted in Thenkinnam