Saturday, December 29, 2007

158. பூங்காற்றிலே உன் சுவாசத்தை...



ஓ.. கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
(கண்ணில்..)
(கண்ணில்..)

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..
(பூங்காற்றிலே..)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிக்கின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் சந்தனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா..
(பூங்காற்றிலே..)

(கண்ணில்..)
(கண்ணில்..)
வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் முன்னே
ஓடோடி வா..
(பூங்காற்றிலே..)

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து

விரும்பி கேட்டவர்: ரசிகன்

4 Comments:

ஆயில்யன் said...

மற்றுமொரு சூப்பர் ஹிட் பாடலுக்கு நன்றி!

//காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை//

எனக்கு பிடித்த வரிகளோடு....!

Anonymous said...

மொழி மாற்றம் செய்யப்பட்ட பாடல் மாதிரியே இருக்காது. நல்ல பாடல்.

இருந்தாலும் இரண்டு தவறுகள் -

//கவிதைச் சந்தனை ஊற்றி//

சந்தனை இல்லை - செந்தேனை.

//வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை//

விம்பம் - பிம்பம்

நன்றி

ரசிகன் said...

அருமையான பாடல்.. சுண்டியிழுக்கும் இசை...
மனதை நெகிழ வைக்கும் பாடல் வரிகள்.
எல்லாரோட ஆல்டைம் ஃபேவரைட்.

நன்றிகள் ஃமைபிரண்டு..

ரசிகன் said...

பாடல் வரிகளும் கவித்துவமா இருக்கு... இதுபோன்ற சூப்பர் ஹிட் பாடல்களை அடிக்கடி கொடுக்கும் தேன் கிண்ணத்துக்கும்,ஃமைபிரண்டுவுக்கும் வாழ்த்துக்கள்..

Last 25 songs posted in Thenkinnam