Monday, December 3, 2007

52. உனக்கென்ன மேலே நின்றாய்




உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா
நீ சொல்லு நந்தலாலா

( உனக்கென்ன மேலே )

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா
நீ சொல்லு நந்தலாலா

(உனக்கென்ன மேலே)


படம் : சிம்லா ஸ்பெஷல்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: வாலி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

2 Comments:

நாகை சிவா said...

கப்பி

இந்த பாட்டில் எஸ்.பி.பி யின் குரல் ஏற்ற இறக்கம் தான் கிளாஸ்சே..

சரி நம்ம ஆட்டம் ஆரம்பித்து விட்டது.

ஒரு புள்ளி உனக்கு :)

pudugaithendral said...

பாடல் வரிகளாலா? பாடிய பாலுவாலா/
தெரியவில்லை. நான் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று.

நன்றி.

Last 25 songs posted in Thenkinnam