கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள் (2)
துடுப்பு கூட பாரம் என்று கரையை தேடும் ஓடங்கள்
...............கனவு காணும் ......................
பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருகின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன.....
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது...
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
...............கனவு காணும் ......................
காலங்கள் மாறும்....
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி...
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே...
பேதை மனிதனே கடமை இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்..
................கனவு காணும் ............................
படம் : நீங்கள் கேட்டவை
குரல் : KJ யேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் :
Monday, December 3, 2007
53. கனவு கானும் வாழ்க்கை யாவும்
பதிந்தவர் நாகை சிவா @ 12:20 PM
வகை 1980's, KJ ஜேசுதாஸ், இளையராஜா
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
கப்பி
எனக்கு ஒரு புள்ளி எடுத்துக்கவா?
//எனக்கு ஒரு புள்ளி எடுத்துக்கவா?//
:))
கணக்கை ஆரம்பிச்சிருவோமா? ;)
ஒரே படத்தில் ஊக்கப்படுத்தும் 'தோல்வி நிலையென நினைத்தாலும்', துவள வைக்கும் 'கனவு காணும் வாழ்க்கை யாவும்'... நல்ல முரண் :)
சாரி... வேலை கலக்கத்தில் தப்பா அடிச்சுட்டேன் :(
சொல்ல வந்த பாட்டு 'நிலை மாறும் உலகில் நிலைக்குமென்ற கனவில்'... மன்னிக்க :)
என் வேண்டுகோளுக்கிணங்க கானக்கந்தர்வனின் பாடல்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றி.
வரிகள் யாரு??
வைரமுத்து
Post a Comment