ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ
அதன் பேர் நட்பு
நெடுஞ்சாலை ஓரம் பூக்கும் பூ
அதுதான் நம் நட்பு
நெஞ்சோடு பூக்கும் ஞாபக பூ
அதன் பேர் நட்பு
பூமியில் உள்ள பூவெல்லாம்
ஒரு நாளிலே
மண்ணில் உதிரும் பூ
(ஜூன் ஜூலை..)
வாழ்க்கையில் நம் வாழ்க்கையில்
என்றும் பூக்குமே
அது தான் நட்பு
ஊர் கூடி வந்தாலும் எதிர்க்குமே
உன் விழி துடிக்கையில் துடிக்குமே
உன் சோகம் இறக்கி வைக்க
இறைவன் அனுப்பி வைத்த
தோள்கள் தோழமையில் இருக்குமே..
கல்லூரி என்ன கொடுத்தது
கண் மூடி நினைத்தால் புரியுது
வெறும் கல்வி மட்டும் இல்லை
கனவு மட்டும் இல்லை
கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்..
எத்தனையோ குறும்புகள் செய்தோம்
எத்தனையோ கனவுகள் செய்தோம்
எத்தனையோ காயங்கள் கண்டோம் தோழனே..
எத்தனையோ சண்டைகள் பார்த்தோம்
எத்தனையோ வம்புகள் செய்தோம்
எத்தனையோ பாடங்கள் கற்றோம்
அத்தனையும் நாங்கள்தான்
நெஞ்சுக்குள் என்றென்றும் இருக்கும்..
(ஜூன் ஜூலை..)
விதைக்குள் உறங்கும் மரங்களை
காற்றும் மழையும் எழுப்புமே..
உனக்குள் ஒளிந்திருக்கும் உனது திறமைகளை
நட்பு இனம் கண்டு உயர்த்துமே..
நாளைக்கு நம்முடைய பெயர்களை
மரமும் செடியும் உறைக்குமே..
எந்த வகுப்பின் மேஜையிலும்
நடந்த பாதையிலும்
நமது சிரிப்பொலிகள் இருக்குமே...
விடுமுறைகள் வந்திடும் போதும்
வீட்டுக்குள் இன்பங்கள் ஏது
மறுபடியும் இங்கே வர தோன்றுமே...
தனிமையில சில நொடிகள் போக
வருமையிலே சில நொடிகள் போக
எல்லாரும் ஒன்றாக சேர
மனசுக்குள் ஆசைகள் மோத
கல்லூரி நம்மை அழைக்கும்...
படம்: கல்லூரி
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்கள்: கிரீஷ், சுசித்ரா ராமன்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
Thursday, December 27, 2007
152. ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ
பதிந்தவர் MyFriend @ 8:32 AM
வகை 2000's, க்ரீஷ், சுசித்ரா ராமன், ஜோஷுவா ஸ்ரீதர்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
நல்ல பாட்டு.
ஒரே ஒரு பிழை இருக்கு கண்டுபிடிச்சி திருத்திடுங்க ஜிஸ்டர்.
நட்பைச் சொல்லும் அழகிய பாட்டு.
பாடகி பெயரை சுசித்ரா ராமன் என மாற்றி விடுங்கள் மை பிரண்ட்.
சுசித்ரா(மிர்ச்சி)என இன்னொரு பாடகியும் இருக்கிறார்.அவரல்ல இவர்.
Post a Comment