Saturday, December 29, 2007

157. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...



மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சித்ரா

5 Comments:

Anonymous said...

plz dedicate a song "eno kangal un mugame ketkirathe " from "Kalvanin kadhali"

Anonymous said...

dedicate a song "Uyirilae" from "Vettaiyadu Vilaiyadu"

CVR said...

அழகான இசை கலவை மற்றும் குரல்கள்!! :-)
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு!!
பதிவிட்டதற்கு நன்றி!!

Anonymous said...

மைப்ரண்ட்,

இந்த பாடலின் பல்லவியே அசத்தலாக மென்னைமையாக இருக்கும். பதிவிற்க்கு நன்றி.

RS RR said...

அருமை

Last 25 songs posted in Thenkinnam