ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேளம் கொட்டி மேடை கட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம
குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம
காதல் நெஞ்சில்..ஹேஏஏஎ
மேள தாளம்..ஹோஓஒ (2)
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ
(குங்கும தேரில்)
தேவை யாவும் ஹேஏஏஏ
தீர்ந்த பின்னும் ஹோஓஒ (2)
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்
(ஆகாய கங்கை)
படம் : தர்மயுத்தம்
இசை: இளையராஜா
பாடல்: வல்லபன்
பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
Wednesday, December 12, 2007
101. ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடிக்கும்.
Post a Comment