வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை
(வெயிலோடு)
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)
வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்
ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்
தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)
படம்: வெயில்
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்
Tuesday, December 4, 2007
60. வெயிலோடு விளையாடி.. வெயிலோடு உறவாடி..
பதிந்தவர் கப்பி | Kappi @ 10:43 AM
வகை 2000's, GV பிரகாஷ் குமார், கைலாஷ் கெர், திப்பு, நா. முத்துக்குமார், பிரசன்னா, ஜாஸி கிஃப்ட்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
அருமையானா பாட்டு..
//எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்//
அருமையான வரிகள்..
அருமையான இசை..
:-)
கட் காப்பி பாட்டுக்கு எதிர் பதிவு நாங்களும் கட் காப்பி பண்ணி போடுவோம்ல...
http://kuttiescorner.blogspot.com/2007/12/blog-post_9651.html
கப்பி!
மீண்டும் ஒரு புள்ளி ஸ்கோர் பண்ணிட்ட.. நானும் ஒரு பாட்டோ வரேன் இன்னிக்கு .......
//அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்//
அதே தான் ஆனா கொத்து பரோட்டாவுக்கு :)
மை ஃபிரண்ட்
ஆமாங்க ஆமா :))
பவன்
என்னப்பா பாட்டுக்கெல்லாம் எதிர்பதிவா :)))..ஆனா உபயோகமான பதிவு...வெரி குட் ;))
புலி
போட்டி பலமாயிட்டேயிருக்கும் போல :))
பரோட்டா மட்டுமில்ல..ஒவ்வொரு வரில இருக்கறதையும் பண்ணியிருக்கோம்ல :)))
Post a Comment