Monday, December 10, 2007

90. பூவுக்குள் ஒளிந்திருக்கும்...



பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
(பூவுக்குள்)

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
(கல்தோன்றி)
(பூவுக்குள்)

பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
(கல்தோன்றி)
(பூவுக்குள்)

படம்: ஜீன்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
வரிகள்: வைரமுத்து

3 Comments:

Anonymous said...

//பனி//
கனிக்கூட்டம்

நாகை சிவா said...

வைரமுத்து வார்த்தைகளில் விளையாடிய பாடல்களில் ஒன்று :)

காமக said...

கள்ளிக்காட்டுக் கம்பன் மட்டுமே எழுத முடியும்…இத்தகைய வரிகள்

Last 25 songs posted in Thenkinnam