புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
(புத்தம்...)
பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம்....)
வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது
(புத்தம்...)
படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து
விரும்பி கேட்டவர்: இளா
Friday, December 21, 2007
133. புத்தம் புது காலை
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
ரொம்ப நன்றிங்க. அப்புறம் இன்னொரு விருப்பம். நீங்க பதிவிட்டுருக்கிற பாட்டையெல்லாம் ஒரு பதிவுல வெச்சு ஓரமா வெச்சீங்கன்னா எங்கள மாதிரி மக்களுக்கு வசதியா இருக்கும். (கேள்வி கேட்கிறது ஈஸி அப்படின்னெலாம் முணுக கூடாது)
நல்ல ஐடியா.. எப்படின்னு சொல்லுங்க.. அதே மாதிரி செய்திடலாம். :-)
நல்ல ஐடியா.. எப்படின்னு சொல்லுங்க.. அதே மாதிரி செய்திடலாம். :-)
எனது அடுத்த விருப்பப்பாடல் ஒரு குத்துப் பாட்டு. படம் வெயில்
பாட்டு அருவா மினு மினுங்க
//ஒரு பதிவுல வெச்சு ஓரமா வெச்சீங்கன்னா எங்கள மாதிரி மக்களுக்கு வசதியா இருக்கும். (//
நல்லாத்தான் இருக்கும் :)))
Post a Comment