Thursday, December 20, 2007

126. பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது...



பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்
(இது எப்படி..)
(பூவுக்கெல்லாம்..)

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது
கற்றை குழல் கையீடு செய்தது
மூடும் ஆடை முத்தமிட்டது
ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது
ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்துவிட்டது
இதயம் இதயம் மலந்ர்துவிட்டது
இசை என் கதவு திறந்துவிட்டது
காதல் என்பது சரியா தவறா
இதுதான் எனக்கு தெரியவில்லை
(பூவுக்கெல்லாம்..)

படம்: உயிரோடு உயிராக
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கேகே, ஹரிணி
வரிகள்: வைரமுத்து

5 Comments:

குட்டிபிசாசு said...

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு!! மிக்க நன்றி!!

ஜே கே | J K said...

சூப்பரான பாட்டு.

நன்றி .:: மை பிரண்டு ::..

G3 said...

:))) En listil paatai G3 pannum my friendai vanmaiyaaga kandikkiren :P

ஜே கே | J K said...

G3-க்கே G3-யா.

என்ன கொடும G3 இது?.

MyFriend said...

@குட்டிபிசாசு அருண்:
உங்களுக்கு எதாவது பாட்டு வேணுமா? சொல்லுங்க.. போட்டுடுவோம்..


@JK:
ஹீஹீ

@G3:
என் லிஸ்ட்ல உள்ள பாட்டு நீங்க G3 பண்ண மதிரிதான்.. இதுவும். :-P

Last 25 songs posted in Thenkinnam