Friday, December 7, 2007

76. நாடோடி பாட்டு பாட...




நாடோடி பாட்டு பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சில் ஆயிரம் தாளம்
(நாடோடி..)

இருபது வயதில் வருவதுதானா காதல்
அறுபது வரையில் தொடர்வதுதானே காதல்
சிரிக்கிற போது சிரிப்பதுதானா காதல்
அழுகிறபோது ஆறுதல்தானே காதல் - ஹே
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
(காதலை..)

கண்ணை மெல்ல மூடி சாய்ந்து கொள்ளும்போது
மடியாக வேண்டுமே
தட்டுத் தடுமாறி சேர்ந்து விழும் போது
பிடியாக வேண்டுமே
உன் உள்ளம் நான் கண்டு
என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு
என்று வாழும் காதல்தானே காதல்
மலர் விட்டு மலரை தாவுவதால் அல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே காதல் - ஹே
(காதலை..)

கங்கை நதி என்ன காவேரி என்ன
எல்லாமே பெண்மையே
நம்மை இன்று நாளும் தாங்குகிற பூமி
அதுகூட பெண்மையே
நாடாளும் ஆணுக்கும் வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில்
கலங்கரை விளக்கம் தானே பெண்மை
பெண்ணிடம் மனதை கொடுத்துவிட்டாலே போதும்
பௌர்ணமி தானே வாழ்வின் எந்த நாளும்
(காதலை..)
(நாடோடி..)

படம்: ஹரிசந்திரா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

3 Comments:

MyFriend said...

//வேதா said...
யக்கா எங்கிருந்து இப்டியெல்லாம் பாட்டு பிடிக்கற :D இது கார்த்திக்,மீனா நடிச்ச படம் தான?
//

எல்லாம் சொந்த கலேக்ஷன்ல உள்ளதுதான்..

கரேக்ட்டா சொன்னீங்க.. கார்த்திக், மீனா நடிச்ச படமேதான். :-D

G3 said...

one of my all time favourite songs.. idhey maadiri poovelila oru song varum theriyuma? idharku peyar dhaan kaadhalannu hariharan voicela.. mudinja adhayum podunga :))

MyFriend said...

பூவேலில "ஒரு பூ எழுதூம் கவிதை" இன்னும் சூப்பரா இருக்குமே?

Last 25 songs posted in Thenkinnam